Sunday, May 29, 2011

அண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழிகள்

சஹாபா பெருமக்கள் ஓதிய மவ்லித்
(نَحْنُ الَّذِيْنَ بَايَعُوْا مُحَمَّدًا (عَلَى الْجِهَادِ مَا يَقِيْنًا اَبَدًا (بخاري


நாங்கள் உயிர்வாழும் காலமெல்லாம் புனிதப் போர் செய்வோமென முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் நாங்கள்.அறிவிப்பாளர்:அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி, எண்:6661

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒதிய மவ்லித்
هَجَوْتَ مُحَمَّدًا فَاَجَبْتَ عَنْهُ وَعِنْدَ اللهِ فِيْ ذَاكَ الْجَزَاءُ

هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا حَنِيْفًا رَسُوْلِ اللهِ شَيْمَتُهُ الْوَفَاءُ

وَقَالَ اللهُ قَدْ اَرْسَلْتُ عَبْدًا يَقُوْلُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ

(مسلم)

இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் குறைவுபடுத்தி கவி பாடுவேன்.அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.
நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்திபேசுகிறீர்கள்.வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்:சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
அறிவிப்பாளர்:ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
நூல்:முஸ்லிம், எண்:4545

***********************************************************


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ் மிகவும் வெட்கமுள்ளவனாகவும், மிக்க கொடையாளியாகவும் உள்ளான். ஒரு மனிதன் கையை உயர்த்தி அவனிடம் பிரார்த்தனைப் புரியும்போது அந்தக் கைகளை வெறுமையாகத் திருப்பிவிட அல்லாஹ் வெட்கப்படுகிறான்"

அறிவிப்பவர்: ஸல்மான் அல் பாரிஸி (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி, இப்னு மாஜா.

உண்மையான நாவைக் கொண்டும், உள்ளத்தைக் கொண்டும், கலிமா சொன்ன ஒவ்வொருவருக்கும் எனது பரிந்துரை உண்டு.

-- ரஸுலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் --

**************************************************************
அஷரத்துல் முபஷ்ஷிரீன்.

சொர்க்கத்திற்கு செல்பவர்கள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் :
மறுமை நாளில் விசாரணைக்குப் பின் தான் ஒருவர் சொர்க்கவாதியா நரகவாதியா என்பது தெரியும், என்றாலும் கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள் ஒரு சிலர் இவ்வுலகிலேயே சொர்க்கவாதி என்று நற்செய்தி கூறிச் சென்றுள்ளார்கள்.
நற்செய்தி கூறப்பட்டவர்கள்:

"அபூபக்ர்" சொர்க்கத்தில் இருப்பார்,
"உமர்" சொர்க்கத்தில் இருப்பார்,
"உஸ்மான்" சொர்க்கத்தில் இருப்பார்,
"அலீ" சொர்க்கத்தில் இருப்பார்,
"தல்ஹா" சொர்க்கத்தில் இருப்பார்,
"ஸுபைர்" சொர்க்கத்தில் இருப்பார்,
"அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்" சொர்க்கத்தில் இருப்பார்,
"ஸஅத் பின் அபீவக்காஸ்" சொர்க்கத்தில் இருப்பார்,
"ஸயீத் பின் ஸைத்" சொர்க்கத்தில் இருப்பார்,
"அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்" சொர்க்கத்தில் இருப்பார்
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல் : அஹ்மத் 1543


அறிப்பாளர் அனஸ்(ரலி)-

*****************************************************************

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று கண்மணி நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

அதற்கு கண்மணி நபி(ஸல்)அவர்கள்

''நான் (எல்லா விஷயத்திலும்)உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்" என்று கூறினார்கள்.

நூல்கள்:புகாரி,முஸ்லிம்.

***********************************************************************

அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

" பெருமானார் கண்மணி நாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொடர்ச்சியாக அவர்களுடைய குடும்பத்தில் (அஹ்லுல் பைத்) பாருங்கள். நீங்கள் அவர்களுடைய குடும்பத்திற்கு (அஹ்லுல் பைத்) நல்லவர்கள் அல்ல என்றால் பெருமானார் கண்மணி நாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நல்லவர்கள் அல்ல" (ஸஹீஹுல் புஹாரி – 3713 - 3751)

அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
"எவன் கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, "நான் என்னுடைய குடும்பத்தினருடன் அன்பு வைத்திருப்பதை விட பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தினர் (அஹ்லுல் பைத்) மீது அன்பு வைப்பது எனக்கு மேலானது"
(ஸஹீஹுல் புஹாரி - 3712)


ان الله تعالى يبعث لهذه الامة على رأس كلّ مائة سنة من يجدد لها دينها

சையதினா அபு ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அர்விக்கின்றார்கள். ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் துவக்கத்திலும் இஸ்லாத்தை உயிர்பிக்க செய்வதற்காக ஒருவரை இந்த உம்மத்திற்கு நியமிப்பான், அவர் இஸ்லாம் பரிபூரண நிலையில் முன்பு இருந்ததை போல மீட்சி பெற செய்வார்.

மேற்சொல்லப்பட்ட இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் கலைநிபுணர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் அபுதாவூத் மற்றும் இமாம் ஹாகிம் அவர்களால் முஸ்ததர்க் என்ற நூலிலும்
இமாம் பைஹகி அவர்களால் தன்னுடைய அல்-மாரிஃபா என்ற நூலிலும்
ஹதீஸ் கலை மேதையான இமாம் ஜலால்'அத்தீன் சுயுதி அவர்களால் ஜாமி அல் ஸகிர் பி ஹதீஸ் அல் பஷீர் வல் நஸீர் என்ற நூலிலும்
இமாம் பைஹகி அவர்களால் தன்னுடைய அல் முத்கல் என்ற நூலிலும்
இமாம் ஹசன் பின் சூபியான் மற்றும் இமாம் பஸார் இருவரும் தற்தன் முஸ்னத் என்ற நூலிலும்
இமாம் தப்ரானி அவர்களால் தன்னுடைய அல்-முஜம் அல்-அவ்சத் என்ற நூலிலும்
இமாம் இப்னு 'ஹாதி அவர்களால் தன்னுடைய காமில் என்ற நூலிலும்
இமாம் அபு'நயீம் அவர்களால் தன்னுடைய அல்-ஹில்யா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கள் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது

அவன் கேட்கின்ற செவியாக,
அவன் பார்க்கின்ற கண்ணாக,
அவன் பற்றுகின்ற கையாக,
அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன்.
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.
என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 6502)

மனிதர்கள் விடும் மூச்சைக் கொண்டு மலக்குகள் படைக்கப்படுகின்றன. இதில் மிக சக்தி வாய்ந்த வெட்கமுள்ள மலக்குகள் பெண்களின் மூச்சுக்காற்றிலிருந்து படைக்கப்படுகின்றன.

-- இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அலைஹி ரஹ்மா --

நூல்: மீஸானுல் குப்ரா

*********************************************************************

ஹஸ்ரத் ஆதம் நபியின் அறிவையும், ஹஸ்ரத் நூஹ் நபியின் இறையச்சத்தையும், ஹஸ்ரத் இப்ராஹீம் நபியின் இறை நேசத்தையும், ஹஸ்ரத் மூஸா நபியின் அச்சத்தையும், ஹஸ்ரத் ஈஸா நபியின் இறை வணக்கத்தையும் காண விரும்புவோர் அபூதாலிபின் மகன் அலீயை பார்க்கவும்.

-- ரஸுலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் --
*******************************************************************

நான் அர்ஷுக்குக் கீழே அஹதாகவும், வானத்தில் அஹ்மதாகவும், பூமியில் முஹம்மதாகவும், பாதாளத்தில் மஹ்மூதாகவும் இருக்கின்றேன்.

-- ரஸுலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் --

******************************************************************
நான் "மீம்" அல்லாத அஹ்மத் ஆக இருக்கின்றேன்.

-- ரஸுலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் --
*******************************************************************

நான் "ஐன்" அல்லாத அரபியாக இருக்கின்றேன்.

-- ரஸுலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்--

*******************************************************************
"உன்னைப் பற்றி சிந்திப்பது உனக்கு போதுமானது"

-- கலிஃபதுல் மூஃமினின் சையதினா இமாம் அல் ஹைதர் அலி பின் அபு தாலிப் கர்ரமல்லாஹு வஜ்ஹஹுல் கரீம் --

இரவு நீளமானது, அதை தூக்கத்தினால் சிறிதாக்கி விடாதீர்கள்.
பகல் பிரகாசமானது, அதை பாவங்களினால் இருளாக்கி விடாதீர்கள்.

-‍‍- ரஸூலே அக்ரம் அஹ்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் --

*********************************************************************

கவனமாக கேளுங்கள் ! எவரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிவதிலிருந்து ( நஃப்ஸ் என்னும் இச்சை போரட்டதிலிருந்து ) பின்னடைகிறார்களோ ! அவர்களை அல்லாஹ் இழிவுப்படுத்துவான். எந்த சமூகத்தில் தீமைகள் மலிகின்றனவோ அதன் மீது அல்லாஹ் சோதனைகளை இறக்குவான்.

--‍ கலீஃபதுல் மூஃமினின் சீத்திக் அல் அக்பர் அபூபக்கர் அஃப்ஸலுல் பஷர் ரழியல்லாஹு அன்ஹு --

************************************************************

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். ..

'அழிவை உண்டாக்கக்கூடிய ஏழு பாவங்களை விட்டுத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று கண்மணி நாயகம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது,
(இதைக் கேட்ட நபித்தோழர்கள்) ''இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?'' என வினவினார்கள். அதற்கு,
1. இறைவனுக்கு இணைவைத்தல்
2. சூனியம் செய்தல்
3. அல்லாஹ் எந்த உயிரைக் கொலைச் செய்வதை தடுத்திருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலை செய்தல்
4. வட்டியை உண்ணுதல்
5. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
7. இறைநம்பிக்கை உள்ள ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு கூறுதல் என்று இறைத்தூதர் அவர்கள் பதிலளித் தார்கள்'' .
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

************************************************************

1033. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி எழுந்தார். 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்திப்பதற்காகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது வானத்தில் மேகம் எதுவும் இருக்கவில்லை. திடீரென மலைகளைப் போன்று மேகங்கள் திரண்டன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள் அவர்களின் தாடி வழியாக மழைத் தண்ணீர் வடிந்ததை கண்டேன். அன்றைய தினமும் மறுநாளும் மூன்றாவது நாளும் அதற்கடுத்த ஜும்ஆவரையுள்ள நாள்களிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. அப்போது அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. செல்வங்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தினார்கள். 'இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று கூறினார்கள். அவர்கள் வானத்தை நோக்கித் தம்கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச் சென்றன. முடிவில் மதீனா ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் மாறியது. 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்து வரக்கூடியவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலில்லை.
Volume :1 Book :15
*****************************************************************

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும்.
பிறரின் குறைகளை ஆராயாதீர்கள்.
பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.
கோபம் கொள்ளாதீர்கள்.
பிணங்கிக் கொள்ளாதீர்கள்.
மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.''
(புகாரி, முஸ்லிம்)

************************************************************************

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அறிவிக்கிறார்:

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி : 3797

**************************************************************

புகாரி 1338.
கண்மணி நாயகம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்."
அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :23
*************************************************************

புகாரி Volume :5 Book :65 No:5443.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். 'ரூமா' கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது.
அது விளைச்சல் தரவில்லை. எனவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. எனவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார்.
இந்த விஷயம் கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தம் தோழர்களிடம் 'புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்' என்று கூறினார்கள். நான் என்னுடைய பேரீச்சந் தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.
கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் 'அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்' என்று கூறலானார். இதைக் கண்ட கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அவர் யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு '(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?' என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, 'ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உன்னுடைய கடனை) அடைப்பாயாக!' என்று கூறினார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (என்னுடைய கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். கண்மணி நாயகம் அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நானே சாட்சியம் அளிக்கிறேன்' என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அரீஷ்' (பந்தல்) மற்றும் 'அர்ஷ்' ஆகிய சொற்களுக்குக் 'கட்டடம்' என்று பொருள். '(இச்சொல்லில் இருந்து பிறந்த) 'மஅரூஷாத்' எனும் சொல்லுக்குத் திராட்சை முதலியவற்றின் பந்தல் என்று பொருள்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
***************************************************************

1877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!"
என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
புகாரி Volume :2 Book :29

******************************************************************

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகத்திடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர்(ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக" என்று கூறினார்கள்.
கண்மணி நாயகம் நபி(ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே" என்றார்கள். உமர்(ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!" என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்" என்று கூறினார்கள்.
புகாரி 3294. Volume :3 Book :59
*******************************************************************

'யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி – முஸ்லிம்)

என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி – முஸ்லிம் - திர்மிதி)


ஹஸன் இப்னு அலீ (ரழியல்லாஹுஅன்ஹு) அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களிடமிருந்து
''உமக்கு சந்தேகமளிப்பதை விட்டு விடுவாயாக! உமக்கு சந்தேகம் ஏற்படுத்தாத செயலின் பக்கம் (விரைவீராக!) 'என்ற வார்த்தையை மனனம் செய்து கொண்டேன்.
(திர்மிதீ
************************************************************

நம் கண்மணி நாயகம் அண்ணல் நபி(ஸல்)யவர்கள் ஒரு முறை,

யா அல்லாஹ்! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக! எனப் பிரார்த்தித்தார்.
அப்போது அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர்,
இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ,
நபிகளார் மீண்டும்
யா அல்லாஹ்! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக! என்று கேட்டிட,
அதற்கு மீண்டும் அவர்,
இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ,
யா அல்லாஹ்! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக! எனப் பிரார்த்தித்தார்.
அதற்கு மீண்டும் அவர்,
இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ,
மூன்றுமுறையும் ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை அல்லாஹ்டம் வேண்டிய நம் கண்மணி நாயகம் அண்ணல் நபி(ஸல்)யவர்கள் இறுதியில் தம் தோழர்களை நோக்கி

"நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும்"

என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(அறிவிப்பாளர்:-ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
புகாரி-2, பக்கம் 1051)
************************************************************

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) ,
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
*************************************************************

அறிவிப்பவர்: உமர் (ரலி),
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி,முஸ்லிம்

******************************************************************

புகாரி 1338.
கண்மணி நாயகம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்."
அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :23

*********************************************************************

புகாரி 5007.
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார்
நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம்.
அப்போது ஓர் இளம் பெண் வந்து 'எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?' என்று கேட்டாள்.
அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் 'உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?' அல்லது 'ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?' என்று கேட்டோம். அவர், 'இல்லை; குர்ஆனின் அன்னை' என்றழைக்கப்படும் ('அல்ஃபாத்திஹா') அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்' என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'செல்லும் வரையில்' அல்லது 'சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்' ஒன்றும் செய்துவிடாதீர்கள்' என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். 'இது ('அல் ஃபாத்திஹா' ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

******************************************************************

புகாரி 1474. & 1475.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்..."
வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளில் சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம்(அலை) அவர்களிடமும் பிறகு மூஸா(அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்."
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ்வின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று சொர்க்கத்து வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளிலே அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை 'மகாமுல் மஹ்மூத்' எனும் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவான். அப்போது அங்கு குழுமி இருக்கும் அனைவரும் நபி(ஸல்) அவர்களைப் பாராட்டு வார்கள்" என இப்னு உமர்(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.

**********************************************************************

புகாரி 3561.
அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.
வேறுசில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.

*********************************************************************
புகாரி- 6281.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி(ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தம் கஃபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.

**********************************************************************

நிச்சயமாக துஆ வானத்திற்கும், பூமிக்குமிடையில் நிறுத்தப்பட்டுள்ளது. உனது நபியின் மீது சலவாத்து சொல்லும் வரை அதில் நின்றும் எதுவும் உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

ஹதீது: திர்மிதி, 922.
மிஷ்காத் 938.

*******************************************************************

Thanks - Ahlus Sunnah Wal Jama-ah(face book)