Saturday, May 14, 2011

நாகூர் பாதுஷா நாயகம் கந்தூரிவிழா


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வெள்ளிக்கிழமை 13/05/2011 அன்று காலை 9.00 மணிக்கு
கருணைக்கடல் குதுபுல்மஜீத் குத்புல் ஃபரீத் செய்யிது சதாத் செய்யிது அப்துல்காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ் ஷாகுல்ஹமீது மீரான் சாஹிபு காதிர் நாகூரி (ரலி)அவர்களது உருஸ் கந்தூரி விழா மீரான் சாஹிப் மௌலூதுடன் மிக விமர்சையாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியை அடியக்கமங்கலம் முஹம்மது ரியாஸ் குழுவினர் மற்றும் சபை அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.











கந்தூரி நிகழ்ச்சி மற்றும் சிறப்பு சொற்பொழிவு துவக்கம்
இந்நிகழ்ச்சிக்கு கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி தலைமை வகித்தார்
மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர்
கிராத் கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன்



ஹுவல்வுஜூது பாடலை கலீபா ஆலிம்புலவர் பாடுகிறார்கள்

அதன் தமிழாக்கம் மன்னார்குடி ஷேக்தாவூது
ஞானப்பாடல் மதுக்கூர் எம்.முஹம்மது தாவூது
தலைமை உரை கருணைக்கடல் சாகுல்ஹமீது பாதுஷா நாயகத்தின் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக எடுத்தியம்பினார்கள்.
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் பாதுஷாநாயகத்தின் உபநியாஷங்களை கூறினார்கள்

சிறப்பு சொற்பொழிவு கலீபா ஆலிம் புலவர்கள் நிகழ்த்துகிறார்கள். மகான்களுக்கு கந்தூரி செய்வதின் அவசியத்தை கூறி திருமறை மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களையும் கோடிட்டு காண்பித்தார்கள்


கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார்கள்

பாதுஷா நாயகத்தின் சிறப்புமிகு கந்தூரிவிழாவை நடத்துவதற்கு மிகவும் ஆர்வம் கொண்டு செயல்பட்ட அடியக்கமங்கலம் முஹம்மது ரியாஸ் அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுகிறார்கள்

நன்றியுரை பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் கூறும்பொழுது 'ஒவ்வொரு ஆண்டும் பாதுஷாநாயகத்தின் கந்தூரிவிழா மிகச்சிறப்பாக செய்யும் ஆன்மீக சகோதரர் கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் அவர்களை நினைவு கூர்ந்தும் முஹம்மது ரியாஸ் குழுவினருக்கு நன்றியும் கூறினார்.'


இந்நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த சமூக ஆர்வளர் குத்தாலம் அசரப்அலி மற்றும் வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா


சலவாத்துடன் இனிதே சிறப்புக் கூட்டம் நிறைவடைந்தது




புகைப்படம் - அருப்புக்கோட்டை அப்பாஸ்
ஆடியோ - அதிரை அப்துல்ரஹ்மான்