Tuesday, February 22, 2011

வெலிகமையில் வேந்தர்நபிகளின் உதயதினவிழா

இலங்கை வெலிகமையில் 20/02/2011 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஸிமிய் அவர்களின் தலைமையில் 52 புஹாரி மஜ்ஸித் மாவத்தை வெலிகமையில் உள்ள பைத்துல்பரக்கா இல்லத்தில் குத்துபுகள் திலகம் யாசீன் மௌலானா(ரலி) அவர்களின் அரங்கில்
கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் உதயதின விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு அறிஞர் பெருமக்கள் உலமாக்கள் ஆன்மீக சகோதரர்கள் வெலிகமை நகர மக்கள் மற்றும் இலங்கை இந்தியா துபாய் கத்தார் குவைத் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பலரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவை slbc.lk இலங்கை தென்றல் வானொலியில் காலை 9.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை அஞ்சல் செய்யப்பட்டன.

கிராஅத்துடன் விழா தொடக்கம்



அறிமுக உரை கிளியனூர் இஸ்மத்


தென்றல் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்
யா நபியல்லாஹ் பாடல்பாடும் குழுவினர்

பாடகர்கள் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி மற்றும் தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் நபிப்புகழ் பாடும்காட்சி






மௌலவி ஹாபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி உரை நிகழ்த்துகிறார்









இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ஜஉபருல் பர்ஸன்ஜி (ரஹ்) அவர்களால் ஆக்கப்பட்ட சிறப்புமிகு அரபு இலக்கிய சரிதை நூலான பர்ஸனஜி மௌலித் சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்களால் உரைநடையிலும் கவிதை வடிவிலும் மொழிபெயர்க்கப்பட்டு "பர்ஸன்ஜி மௌலித் மூலமும் மொழிப்பெயர்ப்பும்" எனும் இந்த நூலை இவ்விழாவில் வெளியிட அதை மௌலவி ஹாபிழ் ஷைகுஅப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள் ஷெய்குநாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தாஜ்தீனின் சுப்ஹான மௌலிது சிடியை இமாம் ஷெய்குனா அவர்களிடம் கொடுத்து வெளியிட்ட காட்சி





காயல்பட்டினம் மௌலவி ஹாபிழ் H.A.அப்துல்காதிர் மஹ்ழரி ஆலிம் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்

மௌலவி அப்துல்காதிரி மஹ்ழரி அவர்களின் அபுதாபி நிகழ்ச்சிகளை தொகுத்த வீடியோ சிடியை சங்கைமிகு ஷெய்குனா அவர்களிடம் கொடுத்து வெளியிட்ட காட்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்க்க அணி செயலாளர் தளபதி மௌலவி A.ஷபீகுர்ரஹ்மான் மன்பயீ அவர்கள் ஷெய்குநாயகம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்கிறார்கள்







தளபதி ஷபீகுர்ரஹ்மான் மன்பயீ அவர்களுக்கும் லால்பேட்டை சமது ஹஜ்ரத் அவர்களுக்கும் நினைவு பரிசு ஷெய்குநாயகம் வழங்குகிறார்கள்

ஆலிம் உசேன்முஹம்மது மன்பயீ ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு நினைவுப் பரிசு

தீன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜ்தீனுக்கு நினைவு பரிசு வழங்கும் காட்சி






வீடியோ காட்சி