ஹு ஹு ஹு என்னும் ஞான ஒளி
அவன் அவன் அவன் என்னும் பொருளுடனே
ரஹ்மான் இறைவனை நினைக்கயிலே
தீர்ந்திடும் நமது இன்னல்களே.!
அனைத்தும் படைத்த படைப்பாளன்
அரவனைத்தாலும் பண்பாளன்
அகிலம் துதிக்கும் அரசாளன்
அல்லிக் கொடுக்கும் தாராளன்.!
உலகில் ஒளியாய் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய் கலந்தவனாம்
உயிரில் உயிராய் மறைந்திருந்தே
உண்மை நிலைகளை அறிபவனாம்.!
இறைவன் அளித்த திருமறையை
தினமும் ஓதி திருமறையின்
பொருளை அறிந்து நடந்திடுவோம்.!
-ஆக்கம் ஹஜ்ரத் மர்ஹும் எஸ்.ஏ.முஹம்மது யாசீன்
தகவல் - ஏ.அப்துல் மாலிக் ஹக்கியுல்காதிரி (வைத்தியர்)