திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ_ல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75வது உதயதின விழா 25.09.2010 சனிக்கிழமை காலையில் 9.30 மணிக்கு மிக சிறப்புடன் நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்கள் தலைமைத் தாங்கினார்கள்.
கஸிதத்துல் அவுனிய்யா ஓதப்பட்டது.
இவ்விழாவில் கலீபாக்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
கலீபா ஹபிபுல்லாஹ் ஹக்கியுல்காதிரி,
கலீபா அப்துல்காசிம் ஹக்கியுல்காதிரி,
கலீபா தியாகி சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி,
கலீபா முஹம்மது காலீது ஷா ஹக்கியுல்காதிரி,
கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி,
கலீபா அட்வகேட் லியாகத்அலி ஹக்கியுல்காதிரி,
கலீபா மதுரை உமர் ஹக்கியுல்காதிரி,
மற்றும் தளபதி இராவுத்தர்
இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.பல ஊர்களிலிருந்தும் முரீதுகளான ஆண்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
தகவல் - முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்