சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் புனித மஜ்லிஸ் ஏப்ரல் 10ம் தேதி துவாவுடன் நிறைவுப் பெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பல நாட்டு இஸ்லாமியர்கள் சங்கைமிகு மௌலானா அவர்களை சந்தித்து துவா பெற்றார்கள்.
முரிதீன்கள் மற்றும் அஹ்பாபுகள் பலரும் பத்துதினங்களாக நடைப்பெற்ற இன்நிகழ்ச்சியில் கலந்து ஞான சந்தேகங்களை கேட்டு தங்களை தெளிவுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
சுங்கைமிகு மௌலானா அவர்கள் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு துபாயிலிருந்து குவைத் புறப்பட்டார்கள்.
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் சங்கைமிகு மௌலானா அவர்களை வரவேற்று தங்களின் மகிழ்ச்சியினை தெரியப்படுத்தினார்கள்.
துபாயில் நடைப்பெற்ற மஜ்லிஸ்சிற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றி தெரியபடுத்தி கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் வீடியோ கிளீப் மற்றும் ஆடியோ மற்றும் உபநியாசங்கள் வெளியீடப்படும்.
புகைப்படங்கள் -மதுக்கூர் ராஜாமுஹம்மது,
கடலூர் -கடலூர் முஹம்மது காசிம்,
ஆடியோ -அதிரை அப்துல்ரஹ்மான்,
வீடியோ -திண்டுக்கல் முஹைய்யத்தீன்,
ஆடியோ ரிக்காடிங் -மதுக்கூர் அமீர்அலி.
இவ்விழா சிறப்பாக அமைவதற்கு உதவியானவர்கள்
நிர்வாகத் தலைவர் சஹாபுதீன், முஹம்மது யூசுப், ஷாஜகான்அப்பாஸ், காதர்ஷாகிப், கிளியனூர் இஸ்மத், அதிரை ஷரபுத்தீன், மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவுது, சிராஜ்தீன், சாகுல்ஹமீது, அபுசாலிஹ், மற்றும் அக்பர்ஷாஜகான், மன்னார்குடி ஷேக்தாவுது, ஷேக்மைதீன், திருமக்கோட்டை பக்ருதீன், தாஜ்தீன், அலாவுதீன், வாவா முஹம்மது, அபுல்பஸர், அபுதாபி ஜெகபர்சாதிக்
மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்த
முஹம்மது அமீன்,
நிசார்,
யூசுப்தீன்,
மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி
கடந்த வெள்ளிக்கிழமை சுபுஹ் தொழுகைக்குப்பின் புர்தா ஷரீப் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஓதப்பட்டது. அதிகாலை 6.30 மணிக்கு சங்கைமிகு மௌலானா அவர்கள் சபைக்கு விஜயம் செய்தார்கள்.
சங்கைமிகு மௌலானாவை ஆர்வத்துடன் காணவந்த பாக்கிஸ்தான் நாட்டைச்சார்ந்த சகோதரர்.