கேள்வி: திருமறையில் அவனே ஆதியானவன் அவனே அந்தமானவன் அவனே வெளியீடானவன் அவனே உள்ளீடானவன் என்று வசனம் வருகிறது இதற்கு பொருள் என்ன…?
பதில்: ஒளியானவனும் அவன்தான் தஸ்பியாகவும் தன்ஸியாகவும் இருக்கிறான். அதாவது வெளியானவன் உள்ளானவன் எனச் சொல்வது…
அவனுக்கு ஒரு ஆரம்பமுமில்லை அவனுக்கு ஓரு முடிவுமில்லை.
வல் அவ்வலு- அவனே தான் ஆரம்பம். ஆரம்பமே இல்லாத ஆரம்பம்
முடிவு இல்லாத முடிவு .
அதுதான் அல்லாஹ்தாலாவுடைய சக்தியெனச் சொல்வது.
ஆரம்பம் போய்க் கொண்டே இருக்கும்.
நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் பார்ப்போம்.
எங்கே முடியும் …முடியும் முடியும் என்று பார்த்தால் முடிவு போய்க் கொண்டேதான் இருக்கும்.
நீங்கள் பூமியை சுற்றிவருகிறீர்கள் என்றால் ஒருபகுதியில் இருந்து மறு பகுதிக்கு வந்துவிடுகிறீர்கள். ஆனால் இதற்கு அப்படி இல்லை. மேலே போனால் போனது தான். அந்த பவனம் இருக்கும் வரையில் சுத்திக் கொண்டிருக்கும். அதற்கு மேலே தாண்டிப்போனால் அதுபோய் கொண்டே இருக்கும். அவ்வளவுதான். கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். பயந்து விடுவீர்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்களுக்கு(நம்மால்) ஒரு குறிப்பிட்ட இடத்தைப்போய் சந்திக்க முடியும். குறிப்பிடாத இடம் ஒன்று இருக்கின்றபோது எப்படிச் சந்திக்க முடியும்,?
அது நெடுக போய்க் கொண்டே இருக்கும். அதற்கு முடிவேயில்லை. எந்தப்பக்கத்தால் போனாலும் சரி பூமிக்கு கீழால் போனாலும்சரி. பூமிக்கு மேலாக போனாலும் சரி பூமிக்கு கீழ்மேல் என்று இல்லையே… அது சுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் (நாம்) மேல்நோக்கி பார்க்கின்ற இடத்தில் மேலாகத் தெரிகிறது. கீழ்நோக்கிப் பார்த்தால் கீழாகத்தெரிகிறது. நாங்கள் (நாம்)
எப்படி இருக்கிறோம் ? நேராக நிற்கின்நோமா…? இல்லை…
தலைக்கீழாகத்தான் நிற்கிறோம்…
வெளவாலைப் போன்று நிற்கிறோம். பூமியினுடைய சக்திதான் எங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் போகாது. எவ்வளவு தூரம் சென்றாலும் கீழேதான் விழுவீர்கள். ஆனால் நிற்பது தலைக்கழால்தான். அதனால்தான் மனிதன் தலைக்கீழாய் போகிறான். தலைக்கீழால் போகக்கூடாது. என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த அறிவை தந்திருக்கிறான். பயப்படாதீர்கள். ஒருகாலும் விழமாட்டிர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான்…
நாங்கள் (நாம்) கவனிப்பதில்லை பாருங்கள். வெளவால் மரத்தில் தொங்குகிறது. நாங்கள் (நாம்) பூமியில் தொங்குகிறோம்.
பெரிய பெரிய கட்டுமானங்கள் கோபுரங்கள் எல்லாம் மறுபக்கம் திரும்பித்தான் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாருங்கள் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சக்தியை அதற்கு நிகர் எதுவுமில்லை…
- இமாம் கலீல்அவுன் மௌலானா