Saturday, September 13, 2014

50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மௌலானா (ரலி) அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமர்களின் 50ஆவது கந்தூரி விழா மிக விமர்சையாக  நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கம்

பர்ஸன்ஸி மௌலிது 
50ம் ஆண்டு பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு
இறையருட்பா இசைத்தட்டு வெளியீடு
தந்தை நாயகத்தைப் பற்றிய சிறப்பான உரை  நிகழ்த்திய மௌலவி ஹாபிழ் எம்.ஷேக்அப்துல்லாஹ் ஜமாலிய் எம்.ஏ. அவர்கள்
மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யா 

திருமுல்லைவாசல் திருவிழாக் கோலம்  அணிந்து திளைத்திருந்தது

 தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் ஆன்மீக சகோதரர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து அருளையும் ஆசியையும்  ஈருலக நன்மைகளை பெற்றுச் சென்றனர்.

அனைவருக்கும் புனித கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

50ம் ஆண்டு கந்தூரி விழா நம் வாழ்வின் பொன்விழா!



























Saturday, July 5, 2014

பொதுக்குழு மற்றும் மாதாந்திரக் கூட்டம் (july 2014)

துபாய் சபையில் வெள்ளிக்கிழமை 04/07/2014 அன்று மாலை புர்தா ஷரீப் ஓதப்பட்டது அதை தொடர்ந்து இப்ஃதார் நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழு (மாதாந்திரக்) கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சகோதரர் கிளியனூர் இஸ்மத்திற்கு வழியனுப்பு விழாவும் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சி துவக்கமாக அதிரை அப்துல்ரஹ்மான் திருமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார் மதுக்கூர் முகம்மது தாவூது ஏகாந்தம் பாடினார் அதன் தழிழாக்கம் ஆழியூர் அபுல்பசர் வாசித்தார்.
 ஞானப்பாடல் மதுக்கூர் சாகுல்ஹமீது அவர்கள் பாட புகழ் பாடலை ஹாஜாமைதீன் பாடினார்.

 பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது மற்றும் சபையின் வளர்ச்சி பற்றிய கருத்துக்களை நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் துணைத் தலைவர் கீழக்கரை எஸ்.ஜெ.காதர் ஷாகிப் மற்றும் கிளியனூர் இஸ்மத் எடுத்தியம்பினார்கள்.

அதை தொடர்ந்து அதிரை ஷர்புதீன் இஸ்மத் சபைக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து வழியனுப்பு உரையாற்றினார்.அவருடன் மன்னார்குடி வைத்தியர் அப்துல் மாலிக்கும் இணைந்துக் கொண்டார்.

 ஆண்டுதோறும் மதுரஸாவிற்காக ரமளானில் ஸதக்கத்துல் ஜாரிய்யா வசூல் செய்து ஏழை மாணவர்களின் கல்வி பணிக்காக ஆற்றி வரும் தொண்டினை இந்த ஆண்டும் இலக்கு தொகையை நிர்ணயித்து துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மிக சிறப்பாக தனிக் குழு அமைத்து செய்துவருகிறது இதில் ஆர்வத்துடன் செயல்படும் அனைத்து ஆன்மீக சகோதரர்களையும் பாராட்டி வாழத்துவதில் இச்சபை பெருமிதம் கொள்கிறது.