Thursday, November 11, 2010

தியாகத் திருநாள் மற்றும் நவம்பர் மாதக் கூட்டம்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 11.11.2010 வியாழன் இரவு இசா தொழுகைக்குப் பின் தியாகத் திருநாள் மற்றும் நவம்பர் மாதக் கூட்டம் துணைத்தலைவர் அப்பாஸ் சாஜகான் தலைமையில் நடைப்பெற்றது.

விழாவின் துவக்கமாக கீழக்கரை காதர் சாஹிப் கிராஅத் ஓதினார்.
மதுக்கூர் பாடகர் தாவூது அவர்கள் ஹுவுல் வுஜூது மற்றும் ஞானப்பாடல்கள் பாடினார்.
அபுல்பஸர் தமிழாக்கம் செய்தார்
மதுக்கூர் சாகுல்ஹமீது நபிப்புகழ் பாடல்பாடினார்.

தலைமை உரை அப்பாஸ் சாஜகான் நிகழ்த்தினார் அதைத் தொடர்ந்து,

பேச்சாளர்கள்
மன்னார்குடி சேக்மைதீன்,
அபிவிருத்தீஸ்வரம் ஜெகபர்தீன்,
கிளியனூர் இஸ்மத்
மற்றும்
நிர்வாகத் தலைவர் ஏபி.சஹாபுதீன் தியாகத்திருநாள் ஹஜ்ஜைப் பற்றிய சரித்திர சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசினார்.

இறுதியாக தௌஃபா பைத்துடன் இனிதே நவம்பர் மாதக்கூட்டம் நிறைவுப் பெற்றது.

இன்ஷாஅல்லாஹ் ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பின் எப்போதும்போல் அனைத்து ஆன்மீக சகோதரர்களும் ஒன்றுக் கூடல் நிகழ்ச்சி காலையில் நடைபெறும். அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.