Saturday, February 6, 2010
ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மாதாந்திரக் கூட்டம்
துபாய் பிப்ரவரி 4ம் தேதி இரவு இஷாத் தொழுகைக்குப் பின் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் மாததந்திரக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகுத்தனர்.கிளியனூர் இஸ்மத் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தி தந்தார்.
கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன் கிராத் ஓதி துவங்கினார்.
"ஆன்மீக அருள்முரசு" அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி ஞானப்பாடலும், நபிப் புகழ் பாடல்களையும் பாடினார்.
மதுக்கூர் முஹம்மது தாவூது "ஊவல் வுஜூது” என்ற ஏகத்துவ அரபுபாடலைப் பாட மன்னார்குடி ஷேக்தாவவுது தமிழில் விளக்கவுரை வாசித்தார்.
நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன், பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப், அதிரை அப்துல் ரஹ்மான், மதுக்கூர் அமீர்அலி ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.
இணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன், முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ், மதுக்கூர் எம்.எஸ்.அப்துல்வஹாப் மற்றும் பல நிர்வாகிகளும் ஆன்மீக சகோதரர்களும் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்து தந்தார்கள்.
சலவாத்துடன் இனிதே இக்கூட்டம் நிறைவு பெற்றது.