Friday, October 16, 2026

புனித தர்பாரில், புனித ராத்திபு ஷரீஃப் மஜ்லிஸ் - திருச்சி

 




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் திரு உத்தரவுப்படி, வழமைபோன்று இன்று (15.10.2026) வியாழக்கிழமை மாலை மஃரிபுக்குப் பிறகு, சங்கைக்குரிய ஷைகு நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம்) அவர்களின் புனித தர்பாரில், புனித ராத்திபு ஷரீஃப் மஜ்லிஸ், கஸீதத்துல் அஹ்மதிய்யா & கஸீதத்துல் அவ்னிய்யா மஜ்லிஸ் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. 

மஜ்லிஸை, மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி நாழிர் ஹழ்ரத் மெளலவி N. ஸயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நடத்திட, மரியாதைக்குரிய தியாகி ஜனாப். K.S. அப்பாஸ் ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய் (துபை) அவர்களின் மதுரஸா பேராசிரியர் மெளலவி N. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் மற்றும்  யாஸீனிய் மெளலவிமார்கள், திருச்சி,  திண்டுக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து முரீதுப் பிள்ளைகள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டார்கள்.

நிறைவில்,‌ மஜ்லிஸில் கலந்து கொண்ட அனைவருக்கும், நார்ஸா சீரணி மற்றும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டன.

புனித தர்பாரில், முத்தான  மஜ்லிஸுகளின் பொருட்டால், அனைவரது நல வளங்களுக்காகவும் நாட்ட தேட்டங்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது.

ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

- தவ்லத் ஹக்கியுல்காதிரி