Wednesday, July 29, 2009

தாகிபிரபம்

இறைவா!
ஆம் உண்மைதானே
என்னில் உன்னை நான் பார்க்கிறேன்
நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய்
இதிற்றான் நான் நீ –என்னும் பிரிந்த பார்வை வந்தது
அதில்
நான் நீ எனப் பாராமலும்
முழுமையாக காண்பதே முழுமையாகும்
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிரிவின்றி எப்போதும்
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
பார்த்துக் கொண்டிருப்பதே
உண்மையான முழுத் தோற்றமாகும்

இப்போதும் எப்போதும்
யான் உன்னிலிருந்து
வெளியான போதும்
எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக் கொண்டு
பரிபூரணத்தில்
கடலில்அலை கலப்பது போலக் கலந்து
இலயித்து நிலைத்து நிற்பதிலே
இன்பம் கண்டிருப்பின்
வெளியாகதிருப்பினும்
வெளித்தோன்றியிருப்பினும்
இரண்டும் பிரமஇரண்டறக்கலந்த
சூனிய அமாவான அந்தகமான
தத்துவ மசி நிலையாகும்
சூனியமாய் எப்படியிருந்தோமோ அப்படியே
இப்போதுமிருக்கிறோம் எனும்
நிலை கொள்ளல் வேண்டும்
அதுவே சாலச் சிறந்தது…!

-இமாம் ஸய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்கள் எழுதிய தாகி பிரபபம் நூலிலிருந்து

No comments: