Thursday, May 29, 2014

சங்கை மிகு செய்கு நாயகம் வழுத்தூர் விஜயம் – 2014

       29-05-2014 வியாழன் மாலை எங்களின் ஆருயிர் சங்கை மிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான், ஷம்ஷீல் வுஜுத், ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்கள் வழுத்தூர் விஜயம் வருகை செய்தார்கள். 
அங்கு வழுத்தூர் சபை தலைவர் ஹாஜி A.குலாம் மொய்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் ,செயலாளர் ஹாஜி மொய்தீன் அப்துல் காதர் V.A.O ஹக்கிய்யுல் காதிரிய் ,துணை செயலாளர் ஹாஜி M.M.B நாதர்ஷா ஹக்கிய்யுல் காதிரிய் மற்றும் முரீதுகள் , அஹபாபுகள் முன்னிலையில் அனைவரும் கூடி ஹாஜி A.அன்வர் பாட்சா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் இல்லத்தில் மகிழ்ச்சியுடன் சந்தோசத்துடன் சிறப்பாக வரவேற்றனர்
  சங்கை மிகு செய்கு நாயகத்தை உளமாற மகிழ்ச்சியுடன் சந்தித்த பேரின்பத்தில்  வழுத்தூர் ,திருபந்துருத்தி, ஆவூர்,பாபுராஜபுரம் முரீதுகள் மற்றும் புதுகோட்டை இன்னும் சில ஊர் அஹபாபுகள் சங்கை மிகு செய்கு நாயகத்தின் சந்திப்பை பெருநாள் வந்ததுபோல் மகிழ்ந்து கொண்டாடினர். தங்கள் ஞான தாகம் நீக்கி நாட்ட தேட்டங்களும் நிறைவேறப் பெற்றனர் .
ABDUL WAHAB
CHENNAI