Monday, July 19, 2010
அஜ்மீர் கரீப் நவாஸ் (ரலி) புனிதப் பயணம்
சுல்தானுல் ஹிந் ஹஜ்ரத் கவாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்தி கரீப் நவாஸ் (ரலி)அவர்களின் புனித ரவ்லா ஷரீப்பிற்கு செல்லக் கூடிய பாக்கியத்தை தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு புகழனைத்தும்.
வடஇந்திய சுற்றுலாவில் டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் சென்றுவிட்டு அஜ்மீருக்கு எனது குடும்பத்தார்களும் ஆத்ம சகோதரர் மதுக்கூர் ஹாஜாஅலாவுதீன் குடும்பத்தார்களும் இணைந்து கரீப் நவாஸ் (ரலி) அவர்களின் புனித ரவ்லாவிற்கு சென்றோம்.
பல மாநிலத்தார்கள், பல மொழியுடையவர்கள், பல மதங்களுடையவர்கள், பல நாடுகளுடையவர்கள் அங்கு ஜியாரத்திற்காக குழுமியிருந்ததை காணமுடிந்தது.மதினாவில் கண்ட மக்களைப்போன்றே அஜ்மீரிலும் காணநேர்ந்தது.
ரோஜா மலர்களால் ரவுலா ஷரீப் அலங்கரிக்கப்பட்டு நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.பாதுகாப்பு அதிகாரிகள் தர்கா ஷரீபை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.புகைப்படங்கள் எடுப்பதற்கு தடைவிதித்துள்ளார்கள்.(சில படங்களை ஆவலினால் எடுத்துள்ளேன்) ஜியாரத்திற்குப் பின் அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதுவிட்டு சில மணி நேரங்களில் புறப்பட்டோம்.
ரவுலாவைப்போலவே நம் மனமும் அமைதி கண்டது.
இந்த சுற்றுலா புறப்படுவதற்கு முன் ஆன்மீகத் தந்தை குத்புஸ்ஸமான் ஷம்ஸ_ல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா அவர்களிடம் உபநியாசங்கள் பெற்று மனம் மகிழ்வுடன் இந்த சுற்றுலாவைத் தொடங்கி பத்து தினங்கள் இறைவனின் பூரண பாதுகாப்புடன் நிறைவு செய்தோம் ஹல்ஹம்ந்துலில்லாஹ்.!
டெல்லியில் ஹஜ்ரத் சையது நிஜாமுத்தீன்(ரஹ்)அவர்களின் புனித ரவ்லாவிற்கு சென்று வரும்படியும் அது விஷேசமாகவே இருக்கிறது என்று ஆன்மீகத்தந்தை அறிவுறுத்தலின் பேரில் அங்கும் சென்று ஜியாரத் செய்துவந்தோம்.
சென்ற இடங்கள் அனைத்தும் புதிய இடங்களாய் காட்சியின்றி பழக்கப்பட்ட பார்த்த இடமாகவே பழகிய மனிதர்களாகவே காட்சியளித்து பதட்டமில்லா பயணமாக நாங்களும் எங்கள் சிறுமிகள் சந்தோசமாய் தங்களின் சுற்றுலாவை கழித்தனர்.
சுற்றுலாவின் துவக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் இருந்தாலும் இருதினங்களில் சீதோசனம் மாறி மேகமூட்டமும் மிதமான மழையும் போகும் இடத்திற்கு குடையாக இறைவன் அளித்த கொடையாக இருந்ததெண்ணி மனம் நிறைந்தது மகிழ்ந்தது ஹல்ஹம்ந்துலில்லாஹ்.!