Friday, August 7, 2009
புனித ஷபே பராஅத் நிகழ்வும் இராத்தீப் நிகழ்ச்சியும்
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித நிகழ்ச்சியான ஷபே பராஅத் நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்கு பின் ஆரம்பிக்கப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து மூன்று யாசீன்கள் ஒதப்பட்டன. பின் பிறை 14 லின் இராத்தீப் நிகழ்ச்சியும் நடைப்பபெற்றது இராத்தீப் நிகழ்ச்சிக்குபின் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.ஷபே பாராஅத் தைப் பற்றி விளக்கமாக பேசினார்கள். அவர்களை தொடர்ந்து கலீபா முஹம்மது காலீத் அவர்கள் வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்ந்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். பாடகர் மதுக்கூர் தாவூது அவர்கள் பெருமானார் (ஸல்-அலை) அவர்களின் புகழ்பாக்களை பாடினார். இவ்விழாவில் மரியாதைக்குரிய ஜாவித்அலி மௌலானா , துணைத்தலைவர் ஏஎன்எம்.முஹம்மது யூசுப் , அதிரை அப்துல்ரஹ்மான் , கீழை காதர்சாகிப் ,கொடிக்கால்பாளயம் அலாவுதீன் ,கிளியனூர் இஸ்மத் ,அதிரை சர்புதீன் , திண்டுக்கல் முஹைய்யத்தீன் ,வழுத்தூர் ரஷீத் , மதுக்கூர் சுபாஹான், பாடகர் சாகுல்ஹமீது ,திருச்சி ஜெகபர்சாதிக் , சார்ஜாவிலிருந்து அக்பர் ராஜாமுஹம்மது ஜெகபர்தீன் , அபுதாபியிருந்து ஜெகபர்சாதிக் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment