Saturday, September 12, 2009
எங்கும் நிறைந்த இறைவனை எப்படி அறிவது…?
கேள்வி: இறை எல்லாப் புறமும் இடத்திலும் சூழ்ந்துள்ளது என்கிறோம்…மனிதனிலும் இறையுள்ளது என்பதை எப்படி உணர்ந்துக் கொள்வது…?
பதில் : மனிதனில் இறையிருப்பதை உணர்வதற்கு பயிற்சியே சரி. (மஜ்லிஸில் அமர்ந்திருக்கக் கூடியவர்களைக் காண்பித்து)அதாவது எங்களைச் சூழ மனிதர்கள்தானே இருக்கிறார்கள் வேறொன்றும் இல்லை(யா)யே…?
எங்களைச் சூழ மனிதர்கள் மட்டுமல்ல எங்களைச் சூழ ஆகாயமும் இருக்கிறது நான் இருக்கிறேன். நான் இருக்கக்கூடிய இடத்தில் ஆகாயம் இல்லை. என்னுடைய உடல்தான் இருக்கிறது. எங்களைச் சுற்றியிருப்பது எல்லாமே ஆகாயம்தான். நாங்கள் கொஞ்சம் (ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு) மாறிவிட்டோம் என்றால் அந்த இடத்தை ஆகாயம் வந்து பூரணமாக்கிவிடும்.
இன்னொரு இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் குறைந்திருக்கும். ஆக எங்களைச் (நம்மை)சுத்திவரயிருப்பது எல்லாமே ஆகாயம்தான். எங்களின் (நம்)உள்ளுக்குள்ளும் ஆகாயம்தான் உள்ளது. நாங்கள்(நாம்) மூச்சை இழுக்கிறோம் போகிறோம் வருகிறோம் இப்படி எல்லாம் உள்ளது. நாங்கள் (நாம்)தனியாக இருக்கவில்லை.
எல்லாப் பரிபூரணத்திலும் நாங்களும் ஒரு பகுதியாக எங்களுக்கு தெரிகிறது. அதாவது ஒரு விஜ் விஜூ என்றால் ஒரு பகுதி. ஒரு தாள் உள்ளது. அதில் ஒரு துண்டை எடுத்தால் அதுவொரு தாளின் பகுதிதான்.
(அதுபோல்) கண்ணைக் கொண்டு நாங்கள் (நாம்) பார்க்கிறோம்.
எப்போது பார்க்க முடியும்?
வெளிச்சம் இருந்தால்தான் பார்க்க முடியும்.
சரி எதைப் பார்க்க போகிறீர்கள் ?
ஒருபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கண்பார்வையும் சரியாக இருக்க வேண்டும். வெளிச்சமும் இருக்கவேண்டும்.
படம் இல்லாவிட்டால் அதைப்பார்க்க முடியுமா?
வெளிச்சம் இல்லாவிட்டால் பார்க்க முடியுமா ?
கண்பார்வை சரியில்லாமல் பார்க்க முடியுமா?
எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்து வருகிற சக்தி எங்களுக்குள் (நமக்குள்) உள்ளது.
அது அல்லாஹ்வுடைய சக்தி. இதைக் கொண்டு எங்களுக்குள் (நமக்குள்) அல்லாஹ்வுடைய சக்தி இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
எல்லாமே அல்லாஹ்தாலாவுடைய சக்திதான்.
வெளிச்சமும் அதுதான், அணுக்களும், ஆகாயமும் அதுதான், தண்ணீரும் அதுதான்.
அந்த சக்தியைக் கொண்டுதான் நாங்கள் (நாம்) இன்றைக்கு வாழ்கிறோம். இல்லாவிட்டால் வாழ முடியாது.
அல்லாஹ்தாலாவின் சக்தி எங்களுக்குள் இருக்கிறது என்பதை நாங்கள் (நாம்) உணரவேண்டும். ஆனால் (அது)ஒரு பகுதிதான்.
ஒரு தாள் இருக்கிறது அதில் நிறைய எழுதலாம். ஓரு கடிதமே எழுத முடியும். அதில் ஓரு துண்டை கிழித்து எடுத்தால் அதில் அந்தக் கடிதத்தை எழுத முடியுமா?
ஆக ஒரு தாளின் (துண்டின்)அளவு சக்திதான் எங்களுக்கு (நமக்கு) இருக்கிறது…(என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்).
(துபாய் 12.08.2009 அன்று நடந்த மஜ்லிஸில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வியும் பதிலும்)